• +91 93846 22369, +91 63695 22369
  • info.jumsworld@gmail.com

47 நாட்கள்

₹100

47 நாட்கள் என்பது எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய ஒரு பிரபலமான தமிழ் நாவல். இந்தக் கதையில் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நிகழும் திடீர் மாற்றங்கள் மற்றும் அவள் எதிர்கொள்ளும் மனஅழுத்தங்கள், சமூக பிரச்சினைகள் ஆகியவை பேசப்படுகின்றன. திருமணத்தின் பிறகு வெளிநாட்டுக்கு செல்லும் கதாநாயகி, அங்கு எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலைகள் மற்றும் அவளது போராட்டம் கதையின் மையமாக உள்ளது.

Available Options Color



Quantity :

Category :Book

Sub Category :TAMIL NOVELS

Stock : 10

கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர், ஆனால் இன்றோ? 47 நாட்கள் கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை! ஏன்? அவசரம். நாகரிகத்தின் வேகம். வேகத்தில் சுகமும் ‘திரில்லும்’ உண்டு. ஆபத்தும் உண்டு. சாதாரண வழுக்குக்கே தீர விசாரிக்க வேண்டும். வாழ்க்கைக்கு வேண்டாமா? முன்பின் அறியாத ஓர் ஆணுடன், பெண் தன் வாழ்க்கையை இணைத்துக்கொள்ளும் முன் – நாளையும் பார்க்க வேண்டாமா? பாவம் விசாலி! கிராமத்தின் இனிய எளிய இயற்கையில் முகிழ்த்து இளம் குருத்து. பாரத மண்ணின் மணம். மாசுபடாத மனம். முதல் இரவில் குமாரிடம் கண்ட பண்பில் எத்தனை கோட்டைகளைக் கட்டுகிறாள்?! ஆகாயத்தில் பறக்கிறாள். கணுவு காண்கிறாள். விசாலியுடன் இந்த 47 நாட்களும் நாமும் பிரியாமல் வாழுகிறோம். அனுபவிக்கிறோம். ‘ஐயோ, என்ன பண்ணுவாள்’ என்று புலம்பி முடிவில் விடுதலை அடைகிறோம்.

Add A Review

Your email address will not be published. Required fields are marked

Your Rating *

You need to Login OR Register

0 (Overall)

Based on 0 Comments