₹50
“ஜாசனின் சாகசங்கள்” என்பது ஜாசன் என்ற கதாப்பாத்திரத்தின் எதிர்கொள்ளும் பல சவால்கள், பயணங்கள் மற்றும் சாகசங்களைப் பற்றிய கதைகள். ஜாசன் துணிச்சல், புத்திசாலித்தனம் மற்றும் சக்தியுடன் ஆபத்தான சூழல்களை சமாளித்து முன்னேறுகிறார். ஒவ்வொரு சாகசமும் அவனை புதிய அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை பாடங்களோடு மோத வைக்கிறது. இந்த கதைகள் கதாபாத்திரத்தின் தனித்துவமான திறன்கள், நட்புகள், எதிரிகள் மற்றும் சவால்களை வெளிப்படுத்துகின்றன. ஜாசன் ஒவ்வொரு சவாலையும் வெற்றி பெறுவதற்கான அறிவு, துணிச்சல் மற்றும் முயற்சியை காட்டுகிறார்.
சாண்டா ரோசா பள்ளியில் பயின்று வந்த முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிப்பை அறிமுகம் செய்வதற்காக "வாசிப்பைக் கற்றுத் தருவோம்" என்ற நிகழ்வை ஆரம்பித்தோம். அதன் ஒரு பகுதியாக எளிய சொற்களைக் கொண்ட பிரபலமான சில ஐரோப்பியச் சிறார் கதைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கி, அவற்றை வாசித்தபின் பிறருக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டோம். அப்போது நாங்கள் எதிர்பாராத வகையில், அவர்கள் தங்கள் கற்பனைகளையும் சேர்த்துச் சொல்லி அக்கதைகளுக்குப் புதிய பரிமாணத்தை அளித்தனர். இப்படியாக இக்கதைத் தொகுப்பை உருவாக்கினோம். அவ்வகையில் இக்கதைகளின் ஆசிரியர்கள் எங்கள் மாணவர்களே. அவர்களுக்கு என் நன்றி. - இ. லூயி ஸ்மைதி, சாண்டா ரோசா, கலிஃபோர்னியா

Add A Review
Your email address will not be published. Required fields are marked
Your Rating *
You need to Login OR Register